சட்டப் பேரவையின் தலைவராக அப்பாவு தேர்வு..!
சட்டப் பேரவையின் தலைவராக அப்பாவு மற்றும் துணைத் தலைவராக பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக சார்பில் ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ அப்பாவும் பேரவை தலைவர் பதவிக்காக மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதேபோல கீழ்பெண்ணாத்தூர் தொகுதி எம்எல்ஏ பிச்சாண்டி பேரவைத் துணைத் தலைவர் பதவிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிலையில் நண்பகல் 12 மணிமுதல் வேட்புமனுதாக்கல் நிறைவடைந்த நிலையில் இதை தவிர வேறு எவரும் தாக்கல் செய்யாததால் ஒருமனதாக இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
நாளை பேரவை தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான பதவியேற்பு நிகழ்வு நடைபெற உள்ளது.






