--- --:--:-- --

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திருமாவளவனுடன் சி.வி விக்னேஸ்வரன் சந்திப்பு

1

நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு வருகை தர வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

 

இதன் ஒருபகுதியாக சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை விக்னேஷ்வரணை சந்தித்து பேசினார். இருவரும் இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது. இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் விரைவில் வருகை தரவேண்டும் எனவும் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்தார்.

 

இதற்கிடையே இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனை அவர் தங்கியிருந்த ஹோட்டலில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கவேண்டும் என்பதே விக்னேஸ்வரனின் நிலைப்பாடு என தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon