--- --:--:-- --

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு..!

1

மிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரிக்கு பேருந்து சேவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் வரும் திங்கள் கிழமையுடன் ஊரடங்கு தளர்வுகளுடன் ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரி உள்ளிட்ட கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிக்கு செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

மத்திய மற்றும் மாநில அரசு தேர்வுகளை மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி பெற்று நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுக்கான பேருந்து சேவையை தொடங்காமல் இருந்த நிலையில் வரும் 12ஆம் தேதி முதல் புதுச்சேரிக்கு மற்றும் பேருந்து சேவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் பேருந்து சேவைகளை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

 

இதைப்போல மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள் பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாய மற்றும் அரசியல் சார்ந்த திட்டங்கள் பொழுதுபோக்கு விளையாட்டு கலாச்சார நிகழ்வுகளும் தொடர்கிறது.

Leave a Reply

Right Menu Icon