நாளை முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு..!
கர்நாடகாவில் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் அடுத்த பத்து நாட்களுக்குள் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஓமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு கொரொனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் முடிவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சுற்றுப்புறங்களில் கொரொனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பத்து நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நாளை முதல் இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





