--- --:--:-- --

கோவை பேருந்து நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்..!

4

ணம் பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, கோவையில் இருந்து கேரளாவிற்கு செல்வோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து உள்ளது. கோவை, உக்கடம் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகள் கூட்டம் அலைமோதும் நிலையில் நேற்று காணப்பட்டது.

 

மேலும், ஓணம் பண்டிகை நாட்களோடு இணைந்து வார இறுதி நாட்களும், மிலாடி நபி பண்டிகையும் வருவதால் தொடர் விடுமுறை கிடைத்து உள்ளது. இதனை அடுத்து கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவ – மாணவிகள் கோவையில் அதிக அளவில் பயின்று வருகின்றனர்.

 

அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஊருக்கு திரும்புவதாலும், பொதுமக்கள் பெருமளவில் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் செல்ல படையெடுத்து உள்ளனர். இதனால் மாநகரம் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு உள்ளது. இதனால், கோவை நகரில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Right Menu Icon