--- --:--:-- --

சிசிடிவி கேமராக்களை பதம் பார்த்த குரங்குகள் கூட்டம்..!

9

த்திரபிரதேசத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு மையத்தில் சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியவர்களை தேர்தல் அதிகாரிகளும் காவல் துறையும் தேடிய நிலையில் கேமராக்களை குரங்குகள் சேதப்படுத்தியது செய்வதறியாது திகைத்தனர்.

 

புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு சிசிடிவி கேமராக்கள் சேதமடைந்ததால் அரசியல் கட்சிகளின் சதியாக இருக்கும் என தேர்தல் அதிகாரிகள் கருதினர். ஆனால் காவல்துறை விசாரணையில் அந்த பகுதியில் அதிகமாக வசிக்கும் குரங்குகளின் வேலைதான் இது என்பது தெரியவந்தது.

 

இதையடுத்து வேறுவழியின்றி கூண்டு வைத்து ஏழு குரங்குகளை பிடித்துள்ளனர். குரங்குகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon