சோழிங்க நல்லூரில் கிரேன் கம்பி அறுந்து விழுந்து விபத்து..!
சென்னை சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் பணியின்போது, 30 டன் கான்கிரீட்டைத் தூக்கும்போது, ராட்சத கிரேன் கம்பி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த பிக்கி குமார் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது, 30 டன் எடையுள்ள காண்கிரீட்டை ராட்சத கிரேன் மூலம் தூக்கப்பட்டபோது, கிரேனில் கம்பி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 50 அடி உயரத்தி இருந்து இருவர் கீழே விழுந்ததில் ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த பிக்கி குமார் (23) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் சந்தோஷ் லோரா (23) படுகாயம் அடைந்தார். அவர் ஆபத்தான நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் பணியின்போது கிரேன் கம்பி அறுந்து விழுந்து நடந்த விபத்தில் ஜார்க்கண்ட் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக, செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





