--- --:--:-- --

தொட்டால் சுடும் – பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கை பை

9

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் anti-rape கன் என்ற பணப்பையை உருவாக்கியிருக்கிறார். நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

 

கடந்த சில ஆண்டுகளில் பெரு நகரங்களில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் பெண்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளன. இதை கருத்தில் கொண்டு வாரணாசியை சேர்ந்த சாம் சவுராஷ்டிரா பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும் டிரிகர் பொருத்தப்பட்ட பணப்பையை தயாரித்துள்ளார்.

 

இதற்கு ஆன்ட்டி ரேப் கண் என்ற பெயரையும் சூட்டியுள்ளார். இந்த பிரத்தியேக பணப்பையில் ப்ளூடூத் பொருத்தப்பட்டிருப்பதால் ஆபத்து நேரத்தில் இதில் இருக்கும் பொத்தானை அழுத்தினால் அது தானாகவே பெண்கள் பாதுகாப்பு மையத்தையோ அல்லது காவல் நிலையத்துக்கோ அழைப்பு சென்று விடும்.

 

ஆபத்து தீவிரமாக இருந்தால் சிக்கலில் இருப்பவர்கள் பணப்பையில் பொருத்தப்பட்ட டிரிகரை அழுத்தினால் அதிலிருந்து வெளியேறும் பயங்கர சத்தம் அருகில் உள்ளவர்களுக்கு சம்பவம் குறித்து கவனிக்க செய்யும். இதனால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

 

இந்த டிரிகரால் யாருக்கும் காயமோ, உயிர் சேதமும் ஏற்படாது என தெரிவித்துள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு கவசமாக செயல்படும் anti-rape கண்ணை தயாரித்த சாம் ஏற்கனவே எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கான பாதுகாப்பு கவசத்தையும் தயாரித்து அயன்மேன் என்று அறியப்பட்டு உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon