உடலில் சேறு பூசி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன்..!
ஈரோடு மாவட்டம் பவானியில் புகழ்பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடலில் சேறு பூசி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த கோவில் திருவிழா கடந்த மாதம் 16-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான சேறுபூசும் திருவிழா வழக்கம்போல் இந்த ஆண்டும் களைகட்டியுள்ளது. சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற ஊர்வலத்தில் பக்தர்களும் வெவ்வேறுவிதமான வேடம் அணிந்து ஊர்வலத்தில் அணிவகுத்து வந்துள்ளனர்.
இவ்வாறு உடலில் சேறு பூசி ஸ்வாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்.






