--- --:--:-- --

அனைத்து காவலர்களுக்கும் முழு முகக்கவசம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

7

களத்தில் உள்ள அனைத்து காதலர்களுக்கும் முழு முக கவசம் வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

கொரொனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் போன்ற முன் களப் பணியாளர்களுக்கு உடலை முழுமையாக பாதுகாக்கும் வகையிலான பாதுகாப்பு ஆடைகள், முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றை வழங்கக்கோரி மதுரை சொக்கி குலத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி பொதுநல வழக்கை தாக்கல் செய்து இருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து பணி செய்வதை தமிழக உள்ளாட்சித் துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

 

இந்த வழக்கு விசாரணையின்போது முன்கள பணியாளர்களாக பணியாற்றும் காவல்துறையினர் 54 ஆயிரத்து 434 பேருக்கு முழு முக கவசம் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து களத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் முகத்தை முழுமையாக மறைக்கும் முகக்கவசம் உள்ளிட்டவைகளை வழங்கவும் அவற்றை காவலர்கள் பயன்படுத்துவதை அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர் உறுதி செய்யவும் உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon