--- --:--:-- --

நியாய விலை கடைகளில் கள்ளத்தனமாக பருப்பு விற்பனை..!

2.1

திருப்பூர் வேலம்பாளையம் நியாய விலை கடை விற்பனையாளர் மக்களுக்கு விநியோகிக்க வேண்டிய துவரம் பருப்பை மொத்தமாக விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

திருப்பூர் வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டையின் அவர் சுமார் 20 கிலோ பருப்பை ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றார். இதனை அங்கிருந்த நபர் செல்போனில் பதிவு செய்துள்ளார்.

 

வீடியோ பதிவு செய்தபடியே இது தொடர்பாக விற்பனையாளரிடம் கேள்வி எழுப்பினார். ஆனால் நியாய விலை கடையில் இருந்த விற்பனையாளர் முறையாக பதிலளிக்கவில்லை.

 

குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பு இல்லை எனக் கூறிவிட்டு வெளியே விற்பனை செய்கிறீர்களா என அவர் கேள்வி எழுப்பிய போது விற்பனையாளர் பதிலளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon