தமிழகத்தில் இன்று 5880 பேருக்கு கொரோனா…! உயிரிந்தோர் 119 பேர்…! சென்னையில் ஆயிரத்திற்கு கீழாக குறைந்தது தொற்று!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,880பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 119 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழாக குறைந்து 984 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை காந்த சில நாட்களாக 5 ஆயிரம் தாண்டி ஊசலாட்டத்திலேயே இருந்து வந்தாலும் தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை நூறைக் கடந்து பதிவாகி வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
https://www.kuttramkuttrame.com/subscription/
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்து 5880 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,85,024ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 6,488ஆகும். இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 2,27,575ஆக உயர்ந்துள்ளது.
இன்றும் உயிரிழப்பு எண்ணிக்கை 100ஐ கடந்து 119 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இதுவரையிலான பலி எண்ணிக்கை 4,690ஆக உயர்ந்து உள்ளது. சென்னையில் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து ஒரு மாதத்திற்கு பிறகு இன்று ஆயிரத்திற்கு கீழாக 984 ஆக பதிவாகியுள்ளது.
அதிக பாதிப்பு
இதனால் சென்னையில் மட்டும் 1,07,109பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் 388, தேனி 351, செங்கல்பட்டு 319, திருவண்ணாமலை 252 , ராணிப்பேட்டை 25 3 , கோவை 258, தஞ்சை 217 என மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது.
மேலும் இதுவரை, தமிழகம் முழுவதும் 29,75,657 பேருக்கு கொரோனா தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது என்றும் இன்று மட்டும் 65,189 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.








