--- --:--:-- --

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : தொற்று பாதிக்கப்பட்டோர் 5, 994 பேர் ..!ஒரே நாளில் 119 பேர் உயிரிப்பு!!

10.1

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்றைய உயிரிழப்பும் 119 ஆக பதிவாகியுள்ளது.

 

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்து 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

 

இன்று 5994 பேருக்கு தொற்று பாதிக்கப் பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 6,020ஆகும். இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 2,38,638ஆக உயர்ந்துள்ளது.

 

இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது வரை பலி எண்ணிக்கை 4,927ஆக உயர்ந்து உள்ளது.

 

சென்னையில் இன்றும் ஆயிரத்திற்கு கீழாக 989 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகிய நிலையில் சென்னையில் மட்டும் 1,09,117பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்- இது வரை, தமிழகம் முழுவதும் 31,09,708பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது. இன்று மட்டும், 68,179 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon