--- --:--:-- --

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 1416 பேருக்கு தொற்று உறுதி…! 1413 பேர் டிஸ்சார்ஜ் .! 14 பேர் உயிரிழப்பு!!

14

மிழகத்தில் இன்று 1416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 1413 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்தில் தினசரி கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 1416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 86 ஆயிரத்து 163 ஆக அதிகரித்துள்ளது.

 

தமிழகத்தில் இன்று 14 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளனர். இதில் 7 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது.

 

சென்னையில் மட்டும் இன்று 382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து16 ஆயிரத்து 496 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1413 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இதுவரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,63,428 ஆக உயர்ந்துள்ளது.

 

தற்போது தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்து 988 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில்
இன்று ஒரே நாளில் 70,156 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 1,22,64,069 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon