தடுப்பூசி போடுவதற்கு முன் கொரொனா பரிசோதனை – புதிய நடைமுறையா..?
குமரி மாவட்டம் முன்சிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏழு தேசப்பற்று அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாமில் 1500க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.
அதில் 350 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு மற்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனைத்தொடர்ந்து டோக்கன் பெற்றவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதன் பின்னே அவர்கள் தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். இந்த புதிய நடைமுறையால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.







