--- --:--:-- --

உடல்நிலை பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்..!

13

டிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பரிசோதனைக்காக இந்த வாரம் அமெரிக்கா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்ட ரஜினிக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

 

அத்துடன் அமெரிக்காவில் இரண்டாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் ரஜினி அமெரிக்கா சென்று தனது உடல் நிலையை பரிசோதித்து வருகிறார்.

 

அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்த நிலையில் அமெரிக்க தூதரகத்தில் ஓரிரு தினங்களில் ஒப்புதல் பெற்று ரஜினி தன் மகள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் அமெரிக்கா பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon