--- --:--:-- --

கொரொனாவால் சாலையிலே மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

2

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே கொரோனா தொற்று காரணமாக சாலையில் மயங்கி விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார். சந்தனபள்ளி பகுதியை சேர்ந்த வெங்கட் கிருஷ்ணா ராவ் என்பவருக்கு கொரொனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது.

 

இதையடுத்து சிகிச்சைக்கு செல்வதற்காக காத்திருந்த போது ஆம்புலன்ஸ் வராத நிலையில் வரும் என்று தாமே முன்வந்து மருத்துவமனைக்கு செல்ல முயன்றார். ஆனால் ஆட்டோ ஓட்டுனர்கள் அவரை அழைத்துச்செல்ல முன்வராததால் நடந்து சென்றார்.

 

இந்நிலையில் நோயின் தாக்கம் அதிகம் ஆனதால் சாலையில் சரிந்து விழுந்து அவர் மரணமடைந்தார். இதனையடுத்து இரண்டு மணி நேரம் அவரது உடல் சாலையில் கிடந்த நிலையில் நகராட்சி ஊழியர்கள் வந்து எடுத்துச் சென்று தகனம் செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon