அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் கொரொனாவால் உயிரிழப்பு!
கொரொனா வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் உயிரிழந்துள்ளதால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. நேற்று மட்டும் ஏறத்தாழ 33 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் இதுவரை கொரொனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 2,000 பேர் உயிரிழந்த நிலையில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடரும் வைரஸ் தொற்று காரணமாக இலிநாய்ட்ஸ் மாகாணத்தில் 1,100 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலிநாய்ட்ஸ் மாகாணத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் 70க்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றினால் பலியாகியுள்ளனர். இதேபோல் பென்சில்வேனியாவில் ஒரேநாளில் 78 பேர் பலியானதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.







