தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை குளிர்வித்த மழை..!
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
குறிப்பாக அடையார், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளான மதுரவாயில், திருவேற்காடு, பூவிருந்தவல்லி, மேடவாக்கம் ஆகிய இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடியது.
செம்பரம்பாக்கம் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக சென்னையில் ஜூன் மாதம் கன மழை பெய்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





