பணத்தை நம்பியே காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் களமிறங்குகிறார் – அண்ணாமலை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களும், பணத்தை நம்பி மட்டுமே களமிறங்குவதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஈரோடு கிழக்குத் தேர்தலுக்கு பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக அமைச்சர் நேருவும், காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவிலும் பேசுவது போன்ற பின்னணியுடன் கூடிய ஆடியோ ஒன்று உள்ளது. இதன் மூலம் பணத்தை வைத்து எதையும் செய்யலாம் என திமுக நினைப்பதாகவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.






