முதலமைச்சர் குடும்பம் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக புகார்..!
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம் பற்றி அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவுகள் இடப்பட்ட நிலையில் அது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உதயநிதியின் மனைவி கிருத்திகா உள்ளிட்ட குடும்ப நபர்களை குறி வைத்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருவதாக சென்னை மத்திய கூட்டுறவு சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து முதலமைச்சரின் குடும்பத்தினர் குறித்து மூன்று சமூக வலைதள பக்கங்களில் இருந்து அதிகம் பகிரப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் தனிநபர் நற்பெயரை அவமதித்தல், பெண்ணின் நாகரீகத்தை குறைக்கும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் மத்திய கூட்டுறவு சைபர் கழகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.






