பிரபல நகைக்கடை வாடிக்கையாளர்களை ஏமாற்றி விட்டதாக புகார்..!
சென்னையில் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வந்த பிரபல நகைக்கடை மாதாந்திர சேமிப்புத் திட்ட வாடிக்கையாளர்களை ஏமாற்றி விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேர்ந்த வாடிக்கையாளர்களிடம் இருந்து 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.
சென்னையில் டி நகர், மயிலாப்பூர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் பிரபல நகைக் கடையில் மாதாந்திர சேமிப்புத் திட்டத்தின் கீழ் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களை இணைந்ததாக கூறப்படுகிறது. சேமிப்பு திட்டம் முதிர்வடைந்த நிலையில் எந்த ஒரு வாடிக்கையாளருக்கும் நகை நிறுவனம் தங்கம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.







