2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு
தமிழ்நாட்டில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இன்று நடைபெறுகிறது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது.
கடந்த ஜனவரி 7-ஆம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த தேர்வு மழை பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் 130 மையங்களில் நடைபெற உள்ள தேர்வை, 41 ஆயிரத்து 485 பேர் எழுதவுள்ளனர்.
காலை 10.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1.30 மணிக்கு நிறைவடையும் என்றும், தேர்வுக்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த தேர்வில், தமிழ் பகுதியில் தேர்ச்சி கட்டாயம் என்ற அறிவிப்பில் இருந்து, மொழி சிறுபான்மை விண்ணப்பதாரர்களுக்கு விலக்களிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





