ரயிலில் பிறந்த நாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்..!
ஆவடி அருகே அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்திய மாணவர்களை காவலர்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றதை கண்டித்து மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் சென்ற ரயிலில் பயணித்த நான்கு கல்லூரி மாணவர்கள் சக மாணவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது ஒரு மாணவர் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளார்.
இதையடுத்து 4 மாணவர்களை காவல்துறையினர்விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதை கண்டித்து ஆவடியில் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





