--- --:--:-- --

எஸ்.ஐ.ஆர் படிவங்களை விரைந்து ஒப்படைக்க கலெக்டர் வேண்டுகோள்..!

6

டலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (27.11.2025) நடைபெற்றது.

 

இந்தக் கூட்டத்தில் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.பி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 04.11.2025 அன்று முதல் நடைபெற்று வருகிறது. தற்போது வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

 

இதுவரை படிவங்களை திரும்ப வழங்காதவர்களிடமிருந்து மீளப்பெரும் பணி வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதில் எழும் சந்தேகங்களுக்கு படிவத்தில் மேற்பகுதியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலரின் (BLO) தொலைபேசி எண் அல்லது சம்மந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் உதவி மையங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

கடலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், தங்களிடமுள்ள படிவங்களை காலம் தாழ்த்தாமல், உடனடியாக பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்பணிகளில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுடன் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் இணைந்து செயலாற்றிட வேண்டும்.

 

வாக்காளர்கள் பூர்த்தி செய்த கணக்கெடுப்பு படிவங்களை கையொப்பமிட்டு ஒப்படைக்கும் நிலையில் உங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். எனவே, வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெறுவதற்கு ஏதுவாக வாக்காளர்கள் உரிய ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Right Menu Icon