கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை ஆட்சியர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் !!!
கோவையில் கடந்த சில தினங்களாகவே கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது.கோவை மாவட்டத்தில் இதுவரை 2183 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று ஒரே நாளில் மட்டும் 139 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று மட்டும் இருவர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டார்.பல்வேறு இடங்களில் நேரடியாக சென்று அதிகாரிகளை முடுக்கி விட்டு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார்.இதன் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.அதனையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி இன்று (20-07-2020) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.மேலும், மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் 5 நாட்கள் தன்னைத் தானே தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார். தனிமைப்படுத்துதலுக்கு பின்னர் மீண்டும் மக்கள் பணியாற்ற உள்ளார்.







