வயதாகி வாய்ப்பு குறைந்ததும் கட்சி ஆரம்பிக்கின்றனர்- ரஜினி, கமல் மீது முதல்வர் மீண்டும் பாய்ச்சல்
வயதாகிவிட்டதால் சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டது; அதனால் சிலர் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கின்றனர் என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக, சேலத்தில் செய்தியாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டி வருமாறு:
தமிழகத்தில் எந்த வளர்ச்சி திட்டத்திற்காகவும் நிலத்தை எடுக்க முடியவில்லை. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள முடியும். வாகன தணிக்கையின்போது காவல்துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படியே காவல்துறை செயல்பட்டு வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் நடத்தும் மாநில தேர்தல் ஆணையம், ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. கால அளவு குறைவாக இருப்பதால் விருப்ப மனு அறிவிப்பை அதிமுக வெளியிட்டது. இத்துடன் தேர்தல் ஆணைய செயல்பாடுகளை தொடர்புபடுத்தக்கூடாது.
வயதாகிவிட்டதால் சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டது; அதனால் சிலர் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கின்றனர். நாட்டில் உள்ள கிராமங்கள், மக்கள் பிரச்சினைகள் என்னென்ன என்பது குறித்த அடிப்படையே தெரியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார் நடிகர் கமல்ஹாசன். இவ்வாறு, முதல்வர் பழனிச்சாமி கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




