கிழக்கு லடாக் பகுதியில் சீனா தனது படைகளைக் குவித்து வருகிறது..!
கிழக்கு லடாக் பகுதியில் சீனா தனது படைகளைக் குவித்து வருவதால் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்திய சீன ராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில் தேசிய பாதுகாப்பு சவால்களும் இந்தியாவின் வான் பலமும் என்ற தலைப்பில் காணொளி வாயிலாக நடைபெற்ற கருத்தரங்கில் காணொளி வாயிலாக உரை நிகழ்த்திய இந்திய விமானப் படையின் தளபதி எல்லை கட்டுப்பாடு கோடு அருகில் சீனா தனது படைகளைக் குவித்து இருப்பதாக தெரிவித்தார்.
அந்த படைகளுக்கு துணையாக அதிக அளவில் ரேடார் கருவிகளும் தரை விட்டு தரை பாயும் ஏவுகணைகளையும் அதிக அளவில் குவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். j20,j10, ரஷ்யாவின் su30 உள்ளிட்ட போர் விமானங்களையும் சீனா இந்திய எல்லையை ஒட்டிய திபெத் படைத்தளத்தில் குவித்துள்ளது.
சீனாவின் ஆக்கிரமிப்பு படை குவிப்பு காரணத்தினால் இத்தகைய அசாதாரண சூழல் ஏற்பட்டாலும் அந்த சவாலை சந்திக்க இந்திய விமானப்படை தயாராக இருப்பதாகவும் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.







