--- --:--:-- --

கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்ப வழி தெரியாமல் சென்ற குழந்தைகள்..!

6

சென்னை மதுரவாயில் அருகே கடைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வந்த சிறுவன் சிறுமி திரும்பவும் வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் போரூர் ஆற்காடு வரை நடந்தே சென்ற நிலையில் போலீசார் அவர்களை மீட்டனர்.

 

தூய்மை பணியாளர்களான நாகப்பன் பார்வதி தம்பதி தங்களது ஐந்து வயது மகளும், நான்கு வயது மகனும் காணாமல் போனதாக மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

குழந்தைகளின் புகைப்படத்தை காவல் நிலையங்களுக்கு அனுப்பிய போலீசார் சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்த நிலையில் போரூர் காவல் நிலையத்தில் குழந்தைகள் இருப்பதாக தகவல் வந்துள்ளது. புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 

தனியாக வெளியே சென்று விட்டு வீடு திரும்புவது எப்படி என்றும் பெற்றோர்களின் செல்போன் எண்களை சிறுவர்கள் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Right Menu Icon