சிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய விவகாரம் : குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை
சிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றம் ஐபி முகவரிகளை வைத்து மூன்று வெவ்வேறு குழுக்களை கண்டுபிடித்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறார் ஆபாச படங்களை பார்ப்பவர்களால் குழந்தைகள் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் என்ற அடிப்படையில் அவ்வாறான படங்களை பார்ப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் சிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றம் கும்பல் தனித்தனி குழுவாக மூன்று ஐபி முகவரிகள் கொண்டு இயங்குவதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்களை அடையாளம் காணும் பணியில் சைபர் பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக திருச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு விசாரணையை துவக்கியுள்ளது.
ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றியவர்கள் பட்டியலில் சுமார் 60 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அந்த ஐபி முகவரிகளை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் ஐபி முகவரி கண்டுபிடிக்கப்பட்டு போலீஸாருக்கு அளிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.





