கூலி படத்திலிருந்து ‘சிக்கிட்டு’ பாடல் வெளியீடு
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தின் வெற்றிப்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் என நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர்.
மேலும் கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். படத்தின் முதல் பாடலான ‘சிக்கிட்டு’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை அறிவு, அனிருத், டி.ராஜேந்தர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை அறிவு எழுதியுள்ளார்.
இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.





