--- --:--:-- --

சீன அதிபரை சிறப்பாக வரவேற்க முதல்வர் வேண்டுகோள்

download

தமிழகத்திற்கு வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியா-சீனா இடையேயான நல்லுறவை மேம்படுத்த இருதரப்பு பேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடைபெறுவது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதோடு தமிழகத்தின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தி உள்ளதாக முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள அவர் தமிழக மக்களின் சார்பாகவும் தமிழக அரசின் சார்பாகவும் இரு தலைவர்களையும் வரவேற்றுள்ளார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே சீனாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே வணிக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் தொடர்பு இருந்துள்ளதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

சீன அதிபரின் வருகை தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு என்று கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் சீன அதிபரின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon