அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..!
சென்னையில் கன மழை பெய்து வரும் சூழலில் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை பாதிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்பொழுது அவசர கட்டுப்பாட்டு வயதுக்கு வந்த தொலைபேசி அழைப்பையடுத்து பொதுமக்களிடம் குறைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து மழை நீர் அகற்றம் தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட இடங்களை நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அதே சமயம் பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் மழையால் பாதிக்கப்படும் இடங்களில் மீட்பு பணிகளை செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக மழை பாதிப்பு தொடர்பாக மீட்பு பணிகளில் ஈடுபட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.






