மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ள முதல்வர்!
தென்காசியில் 119 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
புதிதாக அமைய உள்ள இந்த வளாகத்தில் மாவட்ட வருவாய்த் துறை அலுவலகம், மாவட்ட கருவூல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலக கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.
இதைப்போல் கோயம்புத்தூர் மாவட்டம் விளாங்குறிச்சி சிறப்பு பொருளாதார மண்டலம் வளாகத்தி 114 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்ப கட்டிடத்திற்கும், திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 48 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்ப கட்டிடத்திற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார்.
இந்நிகழ்ச்சிகளில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.







