இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் 10 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.!
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் 10 ஆம் தேதி தமிழகம் வருகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல்களை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் பிப்ரவரி 10ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்துகிறார். அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய அதன் பிறகு பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
அதன் பிறகு அதே சமயத்திலே சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் புதுச்சேரி மற்றும் கேரளாவுக்கு சென்று ஆய்வு நடத்த இருக்கிறார். இறுதிகட்ட ஆய்வாக இருக்கும் என கருதப்படுகிறது.







