--- --:--:-- --

பானி பூரி தண்ணீரில் ரசாயனம்.. அதிர்ச்சியில் பானி பூரி பிரியர்கள்..!

4

ராமேஸ்வரத்தில் விற்பனைக்காக வைத்திருந்த பாணி பூரி தண்ணீரில் ரசாயன கலர் பொடி கலக்கப்பட்டு இருந்ததால் அவை அழிக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

 

புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட்டுகள் ஆகியவற்ற பறிமுதல் செய்து 3 கடைகளுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் சுற்றுலா பயணிகளிடம் விற்பதற்காக வைக்கப்பட்ட பாணி பூரி மற்றும் தண்ணீரை ஆய்வு செய்த அதிகாரிகள் அதன் ரசாயன பொடி கலக்கப்பட்டுருவதை கண்டுபிடித்தனர்.

 

அவற்றை கீழே கொட்டி அளித்த அதிகாரிகள் காசை வாங்கி கல்லாவில் போட்டுக்கொண்டு வருகின்ற மக்களுக்கு நோய் கொடுக்குறீங்க..மக்கள் தொகையை குறைப்பது எப்படி என உங்கள் கடையில் தெரிந்து கொள்ளலாம் என ஆவேசமாக கூறி எச்சரித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon