எஸ்பிபி மருத்துவ கட்டணம் தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம் என வீடியோ வெளியிட்ட சரண்..!
மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் சர்ச்சை தொடர்பாக அவரது மகன் எஸ்பிபி சரண் விளக்கம் அளித்துள்ளார். ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை குறிப்பும் தந்தையின் சிகிச்சைக் கட்டணம் குறித்து வதந்திகள் உலவுவது துரதிர்ஷ்டவசமானது என குறிப்பிட்டுள்ளார்.
கட்டணம் தொடர்பாக தானும், மருத்துவமனை தரப்பும் சேர்ந்து விளக்கமளிக்க இருப்பதாகவும் அது வரை வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.







