அம்பேத்கர் என முழங்குவது ஃபேஷன்: அமித்ஷா
அம்பேத்கரின் பெயருக்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரிக்கலாம் என அமித்ஷா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மக்களவையில் உரையாற்றிய அவர், “அம்பேத்கர்…அம்பேத்கர்…” என முழங்குவது தற்போது ஃபேஷன் ஆகிவிட்டதாக கூறினார்.
எதிர்க்கட்சிகள் இத்தனை முறை அம்பேத்கரின் பெயரை குறிப்பிடுவதற்கு பதிலாகக் கடவுளின் பெயரை குறிப்பிட்டிருந்தால், அடுத்த 7 ஜென்மங்களுக்கு சொர்க்கத்திற்குச் சென்றிருக்கலாம் என்றார்.






