மார்ச்.29 வரை மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் என்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பமான சூழல் நிலவி வந்தது.
ஓரிரு இடங்களில் கோடைமழை பெய்வதால் குளிர்ச்சியான சூழல் நிலவி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.






