--- --:--:-- --

மும்மத முறைப்படி திருமணம் செய்த இளைஞர் ..!

8

யிலாடுதுறையில் இளைஞர் ஒருவர் மூன்று மதங்களின் முறைப்படி திருமணம் செய்துள்ளார். மயிலாடுதுறையை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கும் திருவையாறை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருக்கும் திருமணம் நிச்சயம் உள்ளது.

 

இந்த இடத்தில் புருஷோத்தமன் தனது திருமணத்தை மதநல்லிணக்கத்தைகாட்டும் வகையில் வித்தியாசமாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மூன்று மதங்களின் முறைப்படி திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

 

இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் முதல் நாள் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ முறைப்படியும், மறுநாள் காலை இந்து முறைப்படியும் திருமணம் செய்துகொண்ட நிலையில் இளைஞரின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

Right Menu Icon