சந்திரமுகி படத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை..!
சந்திரமுகி படத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் சந்திரமுகி படம் 2005ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது.
இதில் பிரபு, நாசர், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, மாளவிகா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அனுஷ்காவிடம் படக்குழுவினர் பேசி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






