--- --:--:-- --

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!

7

கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் நேற்று முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோவை ஆகிய எட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

அடுத்த இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon