--- --:--:-- --

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

5

மிழகத்தில் இரண்டு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும், உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் ஒட்டிய மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon