--- --:--:-- --

தமிழகத்தில் தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு..!

9

கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாளை முதல் 26ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Right Menu Icon