தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சிவகங்கை, மதுரை, தஞ்சை, சேலம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.






