63 ஆபாச இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை..!
இந்தியாவில் இயங்கி வரும் 63 ஆபாச இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம் 2020 ஒன்றின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த 63 ஆபாச தளங்களை காண இணைப்புகளை தடை செய்யுமாறு இணையதள சேவையை வழங்குவதற்கு மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்த ஆபாச தளங்களை தடை செய்வதுடன் இணையதளங்களில் இருந்து நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





