சமையல் பணியாளர்களை பணி நீக்கம் செய்த உத்தரவு ரத்து..!
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. சமையல் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய வந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் ஆதிதிராவிட நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளி கல்லூரி விடுதிகளில் சமையல் பணியாளர்களை பணி நீக்கம் செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பணி நியமனம் குறித்த விளம்பரத்தில் கல்வி தகுதி பற்றி எந்த அறிவிப்பும் இல்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார். அறிவிப்பாணையில் கல்வி தகுதி குறித்த தகவல் இல்லை என்பதை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.





