--- --:--:-- --

மது போதையில் மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு பதிவு..!

1

திருச்சி அருகே மதுபோதையில் மனைவியை நடுரோட்டில் வைத்து தாக்கிய கணவனை சமாதானப்படுத்த முயன்ற காவலரை தாக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் மணிகண்டன் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன்.

 

அவருடைய மனைவியை மத்திய பேருந்து நிலையம் அருகே வைத்து தாக்கியுள்ளார். இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் விக்னேஸ்வரனிடம் விசாரணை மேற்கொண்ட போது மது போதையில் காவலரை தாக்க முயன்றுள்ளார்.

 

உடனடியாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு விக்னேஸ்வரனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மது போதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்து பொது இடத்தில் பிரச்சனை செய்தது, காவலரை தாக்கம் முயன்றது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விக்னேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Right Menu Icon