--- --:--:-- --

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? தமிழக அரசு விளக்கம்!

1

100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய முயல்வதாக சமூக வலைதலங்களில் செய்திகள் பரவின.

இதனையடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.
அதில் தமிழ்நாட்டில் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்று தெரிவித்துள்ளது. விதிமுறைகளுக்கு மாறான மின் இணைப்புகளை கண்டறிந்து, ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாகவும் மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.

வீட்டு மின் இணைப்பை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதை கண்டறிந்து உரிய மின் கட்டணத்திற்கு மாற்றவே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மின்சார வாரியம் குறிப்பிட்டுள்ளது.

 

100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பாக பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்பட மாட்டாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

Right Menu Icon