--- --:--:-- --

பெருந்தொற்று பரவல் காரணமாக சி‌ஏ தேர்வுகள் ஒத்தி வைப்பு..!

3

பெருந்தொற்று பரவல் காரணமாக சி‌ஏ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதாகஇந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. பெருந்தொற்று 2வது அலை காரணமாக இந்தியாவில் நாள்தோறும் பெருந்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 

இதனால் பல்வேறு முக்கியமான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் பெருந்தொற்று பரவல் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

வரும் மே மாதம் 21ஆம் தேதி நடைபெறவிருந்த இறுதி தேர்வு மற்றும் மே 2ஆம் தேதி நடைபெறவிருந்த இடைநிலைத் தேர்வு ஆகிய 2 தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் நடைபெறும் 25 நாட்களுக்கு முன்னதாக தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon